நெய்தல். புகைப்படங்களாய்.

Anand Govindan
2 min readNov 30, 2018

சங்கத்தமிழில் நிலவியல் ஐந்திணைகளாக வகைப்படுத்தி அதில் கடல் மற்றும் கடல் சார்ந்த செயற்பாடுகளையே நெய்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தையும் நீரையும் நெசவுச்செய்து, எழில் சேர்த்து, மாருதம் மலர, கதிரவனின் ஒளி உதிர கிழக்கு கடற்கரையின் வாயிலாக இயற்கை நமக்களித்த வளத்தையும், வலை வீசி அதை நமக்கு பயனுற செய்யும் அங்கு வசிக்கும் மக்களையும் சந்தித்துரையாடியதன் ஒரு சிறுத்துளி இது.

அலை கக்கும் நுரைகளை உற்று நோக்கியபடி, பாதம் ஒவ்வொரு மணற் துகள்களையும் உணரும்படி சுவடு பதிக்க, கணவன் கரைத்திரும்பும் நாள் எப்போது, மகனின் முகம் தொடுவானில் மலர்வது எப்போது என்று உறவுகள் காத்திருக்க, தன்னையே நாற்றாக நட்டு கடலில் அறுவடை செய்பவனும் விவசாயியே.

அவ்விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், கடலோடு உரையாடி உறவாடி விதைத்த நல்முறைகளையும், நெறிகளையும் புகைப்பட வடிவமாக இங்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

--

--